அமெரிக்க எம்.பி தேர்தலில் 2 இந்தியர்கள் வெற்றி -ஒருவர் பெண், 5 பேர் தோல்வி

வென்றவர்களில் பெண்ணான துளசி கப்பார்ட், குடியரசுக் கட்சி சார்பில் ஹவாயின் 2வது நாடாளுமன்ற போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 31 வயதான இவர், தனது 21வது வயதில் ஹவாய் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மிகவும் இளம் வயது மாகாண சபை உறுப்பினர் என்ற பெருமையுடன், சாதனை படைத்தவர்.
அமெரிக்கன் சமோவாவில் பிறந்தவரான துளசியின் தந்தை கத்தோலிக்க கிறிஸ்தவர், தாயார் இந்து ஆவார்.
இள வயது உறுப்பினர்
இதன்பின்னர் 23 வயதில் ஹவாய் தேசிய பாதுகாப்புப் படையில் இணைந்தார். 2004ம் ஆண்டு பாக்தாத்துக்கு மருத்துவ சிறப்புப் பணியாளராக அனுப்பப்பட்டார். பின்னர் அதிகாரிகளுக்கான பயிற்சியை முடித்த நிலையில், 2008ம் ஆண்டு குவைத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு தீவிரவாதிகள் எதிர்ப்புப் பயிற்சியை குவைத் ராணுவத்தினருக்கு அளித்தார்.
இந்தப் பணிக்காக அவருக்கு குவைத் ராணுவ தேசிய விருதும் கிடைத்தது. அந்த விருதை பெற்ற முதல் பெண் என்ற பெருமையை அடைந்தார்.
இப்போது 31வது வயதில் எம்.பி.யாக வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இவரது வெற்றிக்கு, அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள இந்து சமயத்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நூலிழை வெற்றி
இதேபோல் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்ற மற்றொரு இந்தியர், டாக்டர் ஆமி பெரா (வயது 45). இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டான் லுங்கரன் என்பவரை குறைந்த அளவிலான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றிபெற்றார். இவருக்கு 50.1 சதவீதம் ஓட்டுகளும், லுங்கரனுக்கு 49.9 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. இவர் கலிபோர்னியாவின் 7வது தொகுதியிலிருந்து இவர் தேர்வாகியுள்ளார்.
5 இந்தியர்கள் தோல்வி
இரு இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்ற நிலையில், தேர்தலில் போட்டியிட்ட மேலும் 5 இந்தியர்கள் தோல்வியை தழுவினார்கள். இவர்களில் டாக்டர் சையத் தாஜ், டாக்டர் மனான் திரிவேதி, உபேந்திரா சிவுக்குலா, ஜாக் உப்பல் ஆகியோர் ஒபாமாவின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள். ரிக்கி கில் என்பவர் குடியரசு கட்சியை சேர்ந்தவர்.
உபேந்திரா சிவுக்குலா நியூ ஜெர்சி மாகாண சட்டசபை துணை சபாநாயகர் ஆவார்.












Click it and Unblock the Notifications