அமெரிக்காவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார்படுத்துவோம்! - ஒபாமா வெற்றி முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சிகாகோ (யு.எஸ்): இன்னும் நிறைவேற்ற வேண்டிய வேலைகளுக்காக, அமெரிக்காவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார்ப்படுத்துவதற்காக புத்துணர்ச்சியுடனும், உறுதியுடனும் மீண்டும் வெள்ளை மாளிக்கைக்கு செல்கிறேன், என்று அதிபர் ஒபாமா தெரிவித்தார்.

Obama

அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆதரவாளார்கள் மத்தியில் ஏற்புரை ஆற்றிய ஒபாமா, முன்னதாக எதிர்த்து போட்டியிட்ட கவர்னர் ராம்னியுடன் தொலைபேசியில் பேசினார்.

அவருடைய கடுமையான உழைப்புக்கும் கடினமான போட்டிக்கும் வாழ்த்து தெரிவித்தார். ராம்னியுடன் போட்டியிட்ட பால் ரயனுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கவர்னர் ராம்னியை நேரில் சந்தித்து ஆதரவு கோர விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.

"நாங்கள் இருவரும் மிக கடுமையாக போட்டியிட்டோம். அமெரிக்காவின் மீது நாங்கள் கொண்டிருந்த அதீத பாசத்தினால்தான். அந்த போட்டி நிகழ்ந்தது" என்றார் ஒபாமா.

மேலும் அவர் கூறுகையில், "நமது பாதை கரடுமுரடாக இருக்கிறது. நாம் செல்லவேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது, நாம் கடுமையாக போராடியிருக்கிறோம். ஆனால் இறுதியில் மிகப் பெரிய வெற்றி அமெரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று இந்த இரவில், இந்த தேர்தலில், அமெரிக்க மக்களாகிய நீங்கள் எனக்கு ஞாபகப்படுத்தியுள்ளீர்கள். உங்கள் எதிர்ப்பார்ப்புகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்," என்றார் உணர்ச்சிப்பூர்வமாக.

எதிர்க் கட்சியினரையும் அரவணைத்து அமெரிக்காவுக்கு தேவையான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுப்பேன் என்றும் கூறினார்.

மிஷலை முன்னிலும் அதிகமாக நேசிக்கிறேன்...

"எனக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் முதல் பெண்மணி மிஷல் ஒபாமாவுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். உங்கள் அனைவருடைய முன்னிலையில் முன்னெப்போதையும் விட இப்போது மிஷலை அதிகமாக நேசிக்கிறேன்...", என்று சொல்லிக்கொள்கிறேன். குழந்தைகள் சாஷா, மலியாவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னுடன் தோழனாக இருந்து நான்கு வருடமாக உடன் உழைத்த துணை அதிபர் பைடனுக்கு எப்படி நன்றி சொன்னாலும் போதாது. எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தார் பைடன். இன்னும் நான்கு வருடங்களும் அவரின் ஒத்துழைப்போடு நாங்கள் புதிய சாதனைகள் படைப்போம்.

இன்றே எங்களின் வேலைகள் ஆரம்பமாகிவிட்டன. எதிர் நோக்கி இருக்கும் சவால்களை வென்று அமெரிக்காவை அடுத்த நூற்றாண்டுக்கு தயார்படுத்துவோம்," என்றரர்.

வர்ஜினியாவிலும் ஒபாமா வெற்றி

முன்னதாக வர்ஜினியாவில் ராம்னி முன்னிலையில் இருந்த்தாக் தகவல்கள் வந்தன. தற்போது அது ஒபாமாவுக்கு சாதகமாக திரும்பி ஒபாமா வெற்றி என அறிவித்துள்ளனர்.

கடும்போட்டி நிலவிய அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஒபாமா பெரும் சாதனை புரிந்துள்ளார்.

பாப்புலர் வாக்குகளில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த ஒபாமா, இப்போது 57,228,140 வாக்குகள், அதாவது 50 சதவீதம் பெற்றுள்ளார். ராம்னி 55, 453,739 வாக்குகளுடன் 48 சதவீத ஆதரவு பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+