எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை- 3 குற்றவாளிகளை கஸ்டடியில் எடுத்தது போலீஸ்

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆல்வின்சுதன் கடந்த 27-ந்தேதியன்று வேம்பத்தூர் மிக்கேல்பட்டணம் கிராமத்தில் ரவுடிக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குளம் மற்றும் வேம்பத்தூர் கிராமத்தை சேர்ந்த 45 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட பிரபு, முத்துக்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமறைவாகினர்.
இந்த நிலையில் இவர்கள் மூவரும் முன் திருப்பூர் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் சில தினங்களுக்கு சரண் அடைந்தனர். அவர்கள் மூவரையும் போலீஸ் விசாரணையில் எடுத்து விசாரிக்க திருப்பாச்சேத்தி போலீசார் அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து மானாமதுரை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ரோஸ்மேரி முன்னிலையில் நேற்று பிரபு, முத்துக்குமார், மகேஸ்வரன் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர். போலீஸ் கோரிக்கையைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட், மூ்வரையும் 3 நாள் போலீஸ் காவலில் அனுமதித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மூவரையும் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து அழைத்துச் சென்றனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே பாரதி (வயது 25), அய்யனார் (29), மணிகண்டன் (24), சோனை முத்து (36), பிரபு (24), மற்றொரு அய்யனார் (21), கண்ணதாசன் (21), விஜய் (16), சிங்கமுத்து (17), வடிவேல் (16), முத்துபாண்டி (16), ராஜகுரு (19), ஜோதி பாசு (17), சக்திவேல் (25), மதியரசன் (25) ஆகிய 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications