கோயில் விவகாரம்: ஆந்திர காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற மஜிலிஸ் கட்சி!
ஹைதராபாத்: ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்கியலட்சுமி கோயில் பராமரிப்பு பணி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கான ஆதரவை மஜிலிஸ் கட்சி விலக்கிக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 14 ஆண்டுகளாக இந்தக் கட்சி ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பாக்கியலட்சுமி கோயில் பராமரிப்பு பணிக்கு மஜிலிஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நேற்று அந்த கட்சி நடத்திய எதிர்ப்பு பேரணியில் 7 எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து இன்று அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறது.
சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளில் அரசின் போக்கு சரியில்லை. எனவே கடந்த 14 வருடங்களாக இருந்த உறவை இப்போது முறித்துக் கொள்கிறோம். ஆந்திராவில் காங்கிரஸின் முகத்தை தோலுரித்துக் காட்டுவோம். ஜகன் மோகன் ரெட்டி நல்ல நண்பர். கிரன் குமார் ரெட்டி ஒரு நண்பராக இருந்தார். 2014 தேர்தல் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்... என்றார் அவர்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவையும் மஜிலிஸ் கட்சி விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications