தண்டவாளத்துக்கு அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்த மதுரை ஆட்டோ டிரைவர்
மதுரை: மதுரை ஆட்டோ டிரைவர் ரயில் தண்டவாளத்துக்கு அருகே கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மன்றாடி சுரேஷ் (32). நேற்றிரவு இவர் வீடு திரும்பவில்லை.
அவரை வீட்டினர் தேடி வந்த நிலையில் இன்று காலை மதுரை திடீர் நகர் பகுதிக்கு பின்புறம் ரயில்வே தண்டவாள பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே தலை, மார்பு பகுதியில் பலத்த ரத்தக் காயத்துடன் சுரேஷ் பிணமாகக் கிடந்தார்.
அருகே சில மது பாட்டில்கள் கிடந்தன. சுரேஷ் தனது நண்பர்களுடன் இங்கு வந்து குடித்து இருக்கலாம் என்றும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
உடல் கிடந்த இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் அழகர் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் மோப்பம் பிடித்தபடி ஓடி நின்றுவிட்டது.
இந்தக் கொலை சம்பவம் திடீர் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications