டெல்லியை தாக்க இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு சதி: பாதுகாப்பு அதிகரிப்பு
டெல்லி: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று உளவுத்துறை எச்சரித்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி மெட்ரோ மற்றும் பிரகதி மைதானத்தில் நடக்கும் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆகிய இடங்களை குழந்தைகள் தினமான இன்று தாக்க இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளது என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதலை நடத்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஏற்கனவே டெல்லிக்குள் புகுந்துவிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.
டெல்லியில் தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறைக்கு சவுதி அரேபியாவில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து டெல்லி காவல் துறை வட்டாரங்கள் கூறுகையில்,
கடந்த 1ம் தேதி சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர் டெல்லி போலீஸ் உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலர் இந்தியாவின் தலைநகரை தாக்க திட்டமிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் அதிகாரிகளும், மத்திய உளவுத்துறையினரும் சேர்ந்து சவுதி தலைநகர் ரியாத் சென்று எச்சரிக்கை விடுத்த நபரை சந்தித்து பேசினர். அப்போது அவர் தாக்குதல் நடத்தும் நபர்கள் குறித்தும், அவர்களின் திட்டங்கள் குறித்தும் தகவல் கொடுத்தார்.
அவர் கூறிய அடையாளங்கள் கடந்த 2008ல் டெல்லி, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூரில் தாக்குதல் நடத்திய ரியாஸ் பட்கலுடன் ஒத்துப் போகிறது என்றனர்.
உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications