கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது - பக்தர்களை வரவேற்க தயாராகிறது சபரிமலை

கார்த்திகை மாதம் நாளை பிறக்கிறது. இதையொட்டி இன்று மாலை தந்திரி கண்டரரு ராஜீ வரரு முன்னிலையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி கோவில் நடையை திறந்து அய்யப்பனுக்கு தீபாராதனை நடத்துகிறார். புதிய மேல்சாந்தியாக தாமோதரன் போற்றியும், மாளிகைபுரத்து அம்மன் கோவில் மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும் பொறுப்பேற்க இருக்கின்றனர்.
கார்த்திகை முதல் நாளான நாளை அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மண்டல கால பூஜைகள் தொடங்கப்படும். அய்யப்பனுக்கு காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரை நெய் அபிஷேகம் செய்யப்படும்.
இதேபோல் அய்யப்பப் பக்தர்கள் நாளை முதல் மாலை அணிந்து விரதம் தொடங்குகின்றனர். தமிழகத்தில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சபரிமலையில் தேவஸ்தானமும் கேரள அரசும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.
சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷத்துடன் வரும் பக்தர்களை வரவேற்க தயாராகிறது சபரிமலை!












Click it and Unblock the Notifications