இலங்கையில் தொடர்ந்து பெய்யும் ‘செம்மழை’யால் பீதி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக ‘சிவப்பு நிற' மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் பீதிக்குள்ளாக்கியுள்ளனர்.
இன்று பிற்பகல் இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல, முதலாம் இலக்கம் ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.
நேற்றும் இதேபோல பல பகுதிகளில் ‘செம்மழை' பெய்திருக்கிறது. இந்த மழை நீர் பட்டிருக்கும் இடங்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன. வீட்டின் கூரைகள், மரங்களின் இலைகளில் பொதுமக்களின் உடைகளிலும் இந்த செந்நிறத் திட்டு படிந்திருப்பதால் ‘ரத்தக் கறை' போல் காணப்படுகிறது.
தொழிற்சாலை கழிவுகள் காற்றில் அதிகளவு வெளியேறி கலந்திருப்பதால் இப்படி ஒரு நிறத்தில் மழை பெய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications