கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே என்று நான் சொல்லவே இல்லை: நாராயணசாமி அந்தர் பல்டி

இது குறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு உலையில் கடந்த அக்டோபர் மாதம் யுரேனியம் நிரப்பி பரிசோதனை தொடங்கப்பட்டது. உலக அளவிலான அணுசக்தி வல்லுனர்கள் இதை பார்வையிட்டு அனுமதி அளித்துள்ளனர். மேலும், நமது நாட்டின் அணு பாதுகாப்புக் கழக வல்லுனர்களும் பார்வையிட்டு அனுமதி வழங்கி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஜெர்மன் நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்கள் மேற்பார்வையில் வெப்பக் காற்று செலுத்தப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. இந்த பரிசோதனைகள் முடிந்து டிசம்பர் மாதம் 15ம் தேதி மின் உற்பத்தி தொடங்கப்படும்.
100 சதவீத மின் உற்பத்தியை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அங்கு கிடைக்கும் 1,000 மெகாவாட் மின்சாரத்தில் 450 மெகாவாட் தமிழகத்திற்கு வழங்கப்படும். 37.5 மெகாவாட் புதுவைக்கும், 122 மெகாவாட் கேரளாவுக்கும், 225 மெகாவாட் கர்நாடகாவுக்கும் அனுப்பப்படும். மீதம் உள்ள மின்சாரம் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று நான் சொல்லவில்லை. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் 1,000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி நான் பிரதமரிடம் வலியுறுத்துவேன் என்று தான் கூறினேன்.
2வது அணு உலையில் 95 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன. இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கும். அதில் 950 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அப்போது தமிழகத்திற்கு 2 அணு உலைகளிலும் சேர்த்து 950 மெகாவாட் மின்சாரமும்,. புதுவைக்கு 67 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications