அப்சல் குரு என்னாச்சு?... நரேந்திர மோடி கேட்கிறார்!

அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது குறித்து டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ள மோடி கூறுகையில், நமது ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றம் மீது 2001ம் ஆண்டு தாக்குதல் நடத்தி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு என்னவானார்... அவருக்குத் தண்டனை கொடுக்கப்போவது எப்போது... கசாப்புக்கு முன்பே அவர் கொடும் செயலில் ஈடுபட்டவராயிற்றே என்று கேட்டுள்ளார் மோடி.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், கசாப்புக்கு இந்தத் தண்டனை சரியானதுதான். ஒரு வழியாக அவன் தூக்கிலிடப்பட்டு விட்டான். ஆனால் கசாப்போடு நாம் நின்று விட முடியாது. மும்பை பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டு தூண்டி விட்டவர்கள் பாகிஸ்தானில்தான் உள்ளனர். அவர்களைப் பிடிக்கும் வரை நாம் ஓய முடியாது. அதேபோல அப்சல் குரு மீதான தண்டனையையும் நாம் விரைவுபடுத்த வேண்டும் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இல்லவே இல்லை என்ற நிலைக்குப் பதில் காலதாமதமானாலும் இப்போதாவது நடந்ததே என்ற நிலை ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. நாட்டின் எதிரி தண்டிக்கப்பட்டுள்ளான் என்றார்.












Click it and Unblock the Notifications