கேரளாவில் பள்ளி மினி பஸ் ஆற்றில் கவிழ்ந்து 50 மாணவ-மாணவியர் காயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 50 மாணவ, மாணவியர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கோட்டார் சிறை என்ற இடத்தில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான மினி பஸ் 50 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்ளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. கோட்டூர் என்ற இடத்தில் அந்த மினி பஸ் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்ஸில் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயத்தில் அலறினர். அதற்குள் அந்த மினி பஸ் அருகில் இருந்த ஆற்றுக்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பஸ் மரங்கள் மற்றும் புதர்களில் சிக்கி அந்தரத்தில் தொங்கியது.
இதில் பஸ்ஸில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் அமைச்சர் அனில் குமார், கலெக்டர் ரத்தன், எஸ்.பி. ராகுல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையி்ட்டனர். மேலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறறு வரும் மாணவ, மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்துக்குள்ளான பள்ளி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications