சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுவை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதம் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் சங்கரராமன் மனைவி பத்மா, பிறழ் சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அப்ரூவர் ரவிசுப்பிரமணியத்தை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் கூறி மனு ஒன்றை அளித்தார். பின்பு அதனை வாபஸ் பெற்றார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது.
அப்போது அரசு வழக்கறிஞர் தேவதாஸ், பத்மா தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஜடியிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், இதனால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. சிபிசிஜடி போலீசார் அனுமதி அளிக்காததால் வழக்கறிஞர்களின் வாதத்தை நீதிபதி முருகன் துவக்கி வைத்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் லட்சுமண ரெட்டியார், ராஜரத்தினம் ஆகியோர் வாதாடினர். வழக்கு விசாரணையின் போது விஜயேந்திரர், ரகு உள்ளிட்ட 18 பேர் ஆஜராகினர். ஆனால் ஜெயேந்திரர் உள்பட 6 பேர் ஆஜராகவில்லை.
மதிய உணவுக்கு பின்னரும் வழக்கு தொடர்ந்து நடந்தது. இதுவரை 16 பேருடைய வழக்கறிஞர்களின் வாதம் முடிந்துள்ளது. இன்னும் 8 பேர் வாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications