2 நாளில் 14 பேருக்கு தூக்கு: இது ஆப்கன் பயங்கரம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் தூக்கு தண்டனை எதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றன. இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 2 நாட்களில் மட்டும் சத்தமில்லாமல் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாம்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பிறகு அதாவது 2001ஆம் ஆண்டிலிருந்து தூக்கு தண்டனை எதுவும் அதிகமாக நிறைவேறவில்லை. ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் 14 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கற்பழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் போன்றவற்றிற்காக தூக்கிலிடப்பட்டதாக அரசு கூறியுள்ளது. இந்த செயலுக்கு மனித உரிமை அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் நாட்டு சிறைகளில் இன்னும் 250 தூக்கு தண்டனை கைதிகள் உள்ளனராம்.












Click it and Unblock the Notifications