மலேசியாவுக்குள் மகிந்த ராஜபக்சேவை கால்வைக்க விடக் கூடாது: கொந்தளித்த தமிழர்கள்
கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெற உள்ள இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாட்டில் போர்க் குற்றவாளியான இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு டிசம்பர் 4 முதல் 6-ந் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து அம்பாங்கில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இன்று பல்வேறு மனித உரிமைகள் அமைப்பினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமக்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், மகிந்த ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பு கொடுக்க மலேசிய அரசு திட்டமிட்டிருப்பது இந்நாட்டில் வாழும் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் செயல். மகிந்த ராஜபக்சேவை அழைத்திருப்பது இந்தியர்களை அவமதிப்பதாகும்.
மகிந்த ராஜபக்சேவை இந்த நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவரை உள்ளே அனுமதித்தால் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.
மற்றொரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினரான ராஜரெத்தினம் கூறுகையில், பாலஸ்தீனத்து மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்போது பிரதமர் நஜிப் கண்டனம் தெரிவிக்கிறார். இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் மெளனம் காக்கிறார். இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஒன்றுதான். மலேசியாவுக்கு நெதன்யாகு வரக் கூடாது என்று சொல்வதற்கான காரணங்கள் அனைத்தும் ராஜபக்சேவுக்கும் பொருந்தும் என்றார்.
மேலும் மகிந்த ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.ஐ.சி. சார்பில் காவல்துறையிடம் மனு ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications