புற்றுநோய் விழிப்புணர்வுக்காக மீசை வளர்த்து பிரசாரம்!

ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி இந்த நூதனப் பிரசாரம் தொடங்கி மாதம் முழுவதும் நடக்கும். இதற்காக ‘முவம்பர்' என்ற பெயரில் இயக்கமாக இதை நடத்தி வருகின்றனர். இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைவோர் இந்த மாதம் முழுவதும் மீசை வளர்த்தி பிராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஈடுபடுவோர். மேலும் புற்றுநோய் கழகத்திற்காக நிதி சேகரிப்பிலும் ஈடுபடுவர்.
இதுகுறித்து முவம்பர் இயக்கத்தின் தலைமை செயலதிகாரியும், இணை நிறுவனருமான ஆடம் கரோன் கூறுகையில், இந்த ஆண்டு இதுவரை 7 லட்சம் பேர் எங்களது இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். இது 10 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த இயக்கத்தை 2003ம் ஆண்டு 30 பேருடன் தொடங்கினோம். இன்று இது லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் விஸ்தீரணமாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
முதலில் வேடிக்கையாகத்தான் இதைத் தொடங்கினோம். மீசை வளர்ப்பதை ஊக்குவிப்பது என்பது முதல் காரணம். பின்னர் பிராஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இது மாறியது.
மீசை வளர்த்தால் நாலு பேர் நம்மிடம் அதுகுறித்துக் கேட்பார்கள். அப்போது பிராஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு நிதி சேகரிப்போம். கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 8 லட்சத்து 55 ஆயிரத்து 203 பேர் பிரசாரம் செய்து 126.3 மில்லியன் டாலர் நிதியை சேகரித்தனர் என்றார் ஆடம்.
பெண்களுக்கு வரும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக நிறைய அமைப்புகள், பிரசாரங்கள், இயக்கங்கள் உள்ளன. ஆனால் பிராஸ்டேட் புற்றுநோய்க்கு எதிரான பிரசாரம் பெரிய அளவில் இல்லை. எனவேதான் இதை நாங்கள் செய்ய ஆரம்பித்தோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications