தமிழகமே இருண்டு கிடக்க சட்டசபையை அலங்கரிக்க குவிக்கப்படும் சர விளக்குகள்!

சட்டசபை மட்டுமல்லாமல் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டையைத்தான் இப்படி விளக்கொளியால் தேவலோகம் போல மாற்றவுள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை வைரவிழா வரும் 30-ந் தேதி பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக சட்டசபை, தலைமை செயலக கட்டிடங்கள் பொலிவூட்டப்படுகின்றன.
கடற்கரை சாலையில் சட்டசபை செல்லும் வழியில் இருபுறமும் சரவிளக்குகளால் தோரணம் அமைக்கப்பட்டு உள்ளது. சட்டசபை முழுவதும் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. மரங்களிலும் சரவிளக்குகள் தோரணமாக தொங்க விடப்பட்டுள்ளன.
சட்டசபை வைரவிழா நடைபெறவுள்ள பேரவை மண்டபத்தின் அழகுக்கு அழகு சேர்க்கப்படுகிறது. வைரவிழாவுக்காக சில மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. வைரவிழாவுக்காக சட்டசபை உள்பட தலைமை செயலக வளாகம் முழுவதும் அங்குலம் அங்குலமாக மெருகூட்டப்படுகிறது.
வைரவிழாவுக்காக, சட்டசபை வளாகத்தில் வண்ண விளக்குகள், குழல் விளக்குகள், அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. சரவிளக்குகளால் தோரணம் அமைத்துள்ளனர். இந்த விளக்குகளின் ஒளிவெள்ளத்தில் விரைவில் சட்டசபை ஜொலிக்கும்.
தலைநகர் சென்னையைத் தவிர தமிழகம் முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 18 மணி நேரத்திற்கு மின்தடை அமல் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் துடித்துத் துவண்டு போயுள்ளனர். ஒரு தொழிலையும் செய்ய முடியவில்லை. சரியாக சட்னி கூட அரைக்க முடியவில்லை. மக்கள் கரண்ட் இல்லாமல் புழுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக சட்டசபையை ஆயிரக்கணக்கான சரவிளக்குள் மூலம் அலங்கரிக்கவுள்ளது அரசு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications