திருவண்ணாமலை கோவிலில் பசங்க பாண்டிராஜுக்கு சுதந்திர அனுமதி...ஆதீனத்திற்கு 'ஸ்டாப்'!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடந்த கார்த்திகை திருவிழாவின்போது ஆதீனம் ஒருவர் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவதைக் காணவ வந்தபோது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி பயங்கர கெடுபிடி செய்தனர். ஆனால் சினிமாப் பட இயக்குநர் பாண்டிராஜ் மட்டும் படு சுதந்திரமாக கோவிலுக்குள் வலம் வந்து திவ்ய தரிசனம் கண்டார்.
திருவண்ணாமலையில் நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி பல லட்சம் பேர் அங்கு குவந்திருந்தனர். இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஆதீனம் தரிசனம் செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்தார். ஆனால் அவரது காரை போலீஸார் திருவண்ணாமலைக்குள்ளேயே அனுமதிக்கவில்லை. மாறாக இங்கிருந்து நடந்து போங்கள் என்று கூறினர்.
இதனால் அதிர்ச்சியான அவர் உடனடியாக இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு சமாச்சாரத்தைக் கூறினார். உடனடியாக விரைந்து வந்த இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆதீனத்தை உள்ளே விட்டனர்.
ஆனால் வடக்குக் கோபுரம் வழியாக அவரை அனுமதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர் சாதாரண மக்கள் செல்லும் வழியாக நடந்தே போனார். ஆனாலும் கோவிலுக்குள் அவரை விடவில்லை. மறுபடியும் இந்து மத அமைப்புகள் போராட்டத்தில் குதிக்கத் தயாரானார்கள்.
இதை அறிந்து ஐஜி கண்ணப்பன் அங்கு விரைந்து வந்தார்.அனைவரிடமும் பாஸ் இருப்பதை கண்ட அவர், அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்னர் ஆதீனம் உள்ளிட்டோர் உள்ளே போனார்கள்.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம், பசங்க சினிமாப் பட இயக்குநரான பாண்டிராஜ், கோவிலுக்குள் எந்தவிதக் கெடுபிடியும் இல்லாமல் படு சுதந்திரமாக வலம் வந்து திவ்ய தரிசனம் செய்தார். அவரை யாரும் எந்த இடத்திலும் தடுத்ததாக தெரியவில்லை.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications