காவிரிப் பிரச்சனை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று கர்நாடக முதல்வரை சந்திக்கும் ஜெ.

காவிரி பிரச்சனை குறித்து தமிழகம் மற்றும் கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பெங்களூர் செல்கிறார். இந்நிலையில் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஜெயலலிதா ஷெட்டரை சந்திக்கையில் முன்வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகள், சம்பா பயிர்களை காப்பதற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியம், காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி கர்நாடகம் காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைமை வழக்குரைஞர், முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாளை கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக காவிரி பிரச்சனை குறித்து கடந்த 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி சென்னையில் வைத்து அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் ஜே.ஹெச். பட்டேலும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இன்று தான் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்கள் காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications