தயாநிதி அழகிரியின் முன் ஜாமீன், பிடிவாரண்ட் ரத்து மீதான தீர்ப்புகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மதுரை: கிரானைட் மோசடி வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் திமுக மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் தயாநிதியின் முன் ஜாமீன் மனு மற்றும் பிடிவாரண்ட் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் நடந்த மோசடிகளால் அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து கிரானைட் அதிபர்கள் பி.ஆர்.பி, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, தொழில் அதிபர் ராஜசேகர் போன்ற பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதில் பி.ஆ.ர்.பி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபர் ராஜசேகர் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆனால் தயாநிதி அழகிரி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தயாநிதி அழகிரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணையில் இருந்த போது கீழவளவு போலீசார் மேலூர் நீதிமன்றத்தில் தயாநிதி அழகிரியை கைது செய்ய பிடிவாரண்ட் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தயாநிதி அழகிரியை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தயாநிதி அழகிரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி சி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வம் பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதே போல் தயாநிதி அழகிரியின் முன் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications