மதுரையில் போலி பெண் டாக்டர் கைது
மதுரை: மதுரையில் போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். வாடகை வண்டி ஓட்டுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள சந்தோஷம் (52) என்பவரது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இதற்காக ரூ 400 கட்டணமாக பெற்றுக் கொண்ட பெண் டாக்டர் சந்தோஷம் நோயாளி முருகனுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளார். அதை அவர் உட்கொண்ட போதும் நோய் குறைந்தபாடு இல்லை.
இதனால் முருகன் அந்த டாக்டரிடம் மீண்டும் முறையிட்டுள்ளார். இதனால் டாக்டருக்கும், முருகனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இது குறித்து தெற்குவாசல் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார் சந்தோஷம் போலி டாக்டர் என்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு வழக்குப் பதிவு செய்து சந்தோஷத்தை கைது செய்தனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications