For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசைக் காப்பாற்றிய கருணாநிதியை நேரில் சந்தித்து பரூக் அப்துல்லா நன்றி

By Chakra
Google Oneindia Tamil News

Farooq Abdullah
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து அரசைக் காப்பாற்றியதற்காக திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா நன்றி தெரிவித்தார்.

சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, கருணாநிதியை சந்தித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய பரூக் அப்துல்லா, மத்திய அரசுக்கு மிக இக்கட்டான நேரத்தில் ஆதரவைத் தந்து உதவியுள்ளார் கருணாநிதி. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கவே நேரில் வந்தேன். அவருக்கு நாங்கள் மிகுந்த நன்றி்க்கடன் பட்டுள்ளோம்.

மூத்த தலைவரான கருணாநிதி எனது தந்தைக்கு (ஷேக் அப்துல்லா) மிக மிக நெருக்கமாக இருந்த நண்பர். அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசவே வந்தேன். மத்திய அரசை இக்கட்டில் இருந்து காத்ததற்காக நன்றியும் தெரிவித்துக் கொண்டேன்.

கருணாநிதிக்கு நாங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம் என்றார்.

English summary
A day after securing the backing of the key ally DMK on the FDI issue, Union Minister Farooq Abdullah today met DMK chief M Karunanidhi and thanked him for his support to the UPA coalition in Parliament. "I thank him for the support that he has given to UPA and in most of the things that are coming up in Parliament. We are very grateful to him", Abdullah told reporters after the meeting. Abdullah, who is here to attend a function, said Karunanidhi was very close to his father and he came to pay his respects to him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X