6 ஊழியர் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் தருகிறோம்-பிரதீபா காவிரி கப்பல் நிர்வாகம்
சென்னை: நிலம் புயலில் சிக்கி, கடலில் விழுந்து உயிரிழந்த மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்துக்குச் சொந்தமான பிரதீபா காவிரி கப்பல் ஊழியர்கள் 6 பேரின் குடும்பங்களுக்கும் இடைக்கால நிவாரணம் வழங்குவதாக அந்த கப்பல் நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலம் புயல் காரணமாக சென்னைக்கு அருகே கரை ஒதுங்கிய பிரதீபா காவிரி கப்பலில் இருந்து குதித்து 6 ஊழியர்கள் பலியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நீதிபதி பால்வசந்தகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கப்பல் உரிமையாளர் சுனில் பவார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உயிரிழந்த 6 ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக அளிக்க தயாராக இருப்பதாகவும், அந்த தொகைக்கான காசோலையை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் விரைவில் அளிப்பதாகவும் உறுதி அளித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதியிடம், கப்பலை விற்பனை செய்து அதன் மூலம் வரும் தொகையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கும் வகையில், கப்பலை விற்பனை செய்வதற்கு நிர்வாகி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கப்பல் நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அப்போது, இந்த வழக்கில் இதுவரை காவல்துறையினர் நடத்தியுள்ள விசாரணை நிலவரம் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்தில் கப்பல் உரிமையாளர் சுனில் பவார் மீது 307 வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காவல்துறையினர், இந்த வழக்கின் கீழ் தன்னை கைது செய்யாமல் இருக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் சுனில் பவார் முன்ஜாமீன் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications