கெட்டுப்போன உணவு கொடுத்த ஐடிசி நிறுவனத்திற்கு ரூ.15000 அபராதம்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: குர்கானைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு கெட்டுப்போன உணவை வழங்கி,உடல் நலம் பாதிப்பு ஏற்படக் காரணமாக இருந்த ஐ டி சி & வெல்கம் குரூப் நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Food
குர்கானை சேர்ந்தவர் பாரத்சிங்,கடந்த 2008 மே 20ம் தேதி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் உள்ள ஐ டி சி & வெல்கம் குரூப் நிறுவனத்தின் ஓட்டலில் சிக்கன் சான்ட்விச் மற்றும் கோக் வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.இதற்கு அவர் சாப்பிட்ட கெட்டுப்போன சிக்கன் சான்ட்விச் மற்றும் கோக்தான் காரணம் என்று அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பாரத்சிங், டெல்லி தென்மேற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.தனது மனுவுடன் மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது டாக்டர்கள் அளித்த சிகிச்சை விவரம் மற்றும் மருந்துப் பட்டியலையும் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நரேந்திர குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐடிசி- வெல்கம் குரூப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், எங்களது ஓட்டலில் அனைத்து உணவு வகைகளையும் நுண்ணுயிரியில் நிபுணர்களை (மைக்ரோ பயாலஜிஸ்ட்) பரிசோதித்த பிறகே விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. அதோடு உயர்தர பராமரிப்பும் மேற்கொள்ளப் படுகிறது.இந்த புகார் தவறானது. அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் "'என்று கூறப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எதிர்மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்தார். பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில், "உடல் உபாதைகளை ஏற்படுத்தும் கெட்டுப்போன உணவு வகைகளை மனுதாரருக்கு எதிர்மனுதாரர்கள் விற்பனை செய்தது தெளிவாக தெரிகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட அசவுகரியம் மற்றும் உடல் உபாதை, மன வேதனை ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்குவது எதிர் மனு தாரர்களுக்கு கடமை ஆகிறது. எனவே வழக்கு செலவு உட்பட அவருக்கு ரூ .15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவிடுகிறேன்"' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+