ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைதளத்தை தாக்கிய தாலிபான் தீவிரவாதிகள்
காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படை தளத்தை தாலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கினர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்கார் மாகாணத் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள விமான நிலைய வளாகத்தில் நேட்டோ படை தளம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு நேட்டோ தளத்தின் வாயிலில் தாலிபான்கள் கார் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதன் பிறகு 5 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நேட்டோ தளத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பலியானவர்களின் விவரம் தெரியவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவ உடையில் 5 பேர் இறந்து கிடந்ததைப் பார்த்தாக பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் இறந்தவர்கள் ராணுவத்தினரா அல்லது தீவிரவாதிகளா என்று தெரியவில்லை என்றார்.
விமான நிலைய வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு இருந்தும் தீவிரவாதிகள் அதையும் மீறி வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். முன்னதாக இதே விமான நிலையத்தை இந்த ஆண்டு தீவிரவாதிகள் இரண்டு முறை தாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தாங்கள் தான் பொறுப்பு என்று தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications