மோடிக்கு நெருக்கடி தர காங். வேட்பாளரை ஆதரித்து கேசுபாய் கட்சி வாபஸ்
மணிநகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடும் மணிநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுவேதா பட்டுக்கு ஆதரவாக கேசுபாய் பட்டேல் கட்சி தமது வேட்பாளரை விலக்கிக் கொண்டிருக்கிறது.
மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடியை எப்படியும் வீழ்த்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது காங்கிரஸ். இதற்காக "குஜராத் மதக் கலவரத்துக்கு காரணமே மோடி" என்று உச்ச நீதிமன்றத்திலேயே புகார் சொல்லி சஸ்பென்ட் ஆன ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி சுவேதா பட்டை களம் இறக்கியது அக்கட்சி. சுவேதா பட்டும் சும்மா இருக்கவில்லை.
"மோடிக்கு எதிரான அரசியல் யுத்தம் என்பது தனிப்பட்டது அல்ல.. குஜராத் மக்களுக்காகவே யுத்தம் நடத்துகிறேன். முன்னாள் முதல்வர் கேசுபாய் பட்டேல் தமது கட்சி வேட்பாளரை விலக்கிக் கொண்டு என்னை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
சுவதே பட்டின் வேண்டுகோளை ஏற்று எதிரியான மோடிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் வகையில் மணிநகர் தொகுதியில் தமது குஜராத் பரிவர்த்தன் கட்சி வேட்பாளரை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார் கேசுபாய் பட்டேல்.
மணிநகர் தொகுதியில் நரேந்திர மோடிக்கும் காங்கிரஸ் வேட்பாளர் சுவேதா பட்டுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடிபிடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications