சென்னை திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஒருவர் சாவு
சென்னை: சென்னையில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள ஆந்திராவில் இருந்து வந்த ஒருவர் திருமண மண்டபத்தில் இருந்த லிஃப்ட் அறுந்து விழுந்ததில் பலியானார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
ஆந்திராவைச் சேர்ந்தவர் சுப்பாராவ். தொழில் அதிபர். அவரது இல்லத் திருமணம் கொருக்குப்பேட்டையில் உள்ள அன்னை திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த பிரசாத் ராவ்(53) என்பவர் மண்டபத்தின் 3வது மாடியில் இருந்து தரைதளத்திற்கு வர லிஃப்டில் ஏறியுள்ளார்.
13 பேர் வரை தாங்கக்கூடிய அந்த லிஃப்டில் பிரசாத் ராவ் உள்பட 3 பேர் மட்டுமே ஏறியுள்ளனர். அப்போது லிஃப்ட்டை தாங்கும் கயிறு அறுந்து அது வேகமாக வந்து தரைதளத்தில் மோதியது. இதில் பிரசாத் ராவ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் திருமண மண்டப சூப்பர்வைசர் ஹரியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications