மேட்டூர், கோபிநத்தம் அருகே கர்நாடக எல்லையில் வசிக்கும் தமிழர்கள் விரட்டியடிப்பு: கருணாநிதி கண்டனம்

எனவே இரு மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம்-ஒழுங்கினைத் பேணிக் காத்திட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சனையின் தொடர்ச்சியாக இரு மாநில மக்களிடையே தோன்றிய கசப்புணர்ச்சி, பகை உணர்ச்சியாக உருவாகிட, கர்நாடக பா.ஜ.க. ஆட்சியாளர்களும், தமிழக அதிமுக ஆட்சியாளர்களும் எந்த நிலையிலும் எள்ளளவும் இடமளித்து விடக்கூடாது.
அதனால்தான் அண்டை மாநிலங்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளைச் சுமூகமாக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று நான் நீண்ட நாட்களாகச் சொல்லி வருகிறேன்.
ஆனால் நேற்று வந்துள்ள செய்தியின்படி மேட்டூர் அருகே கர்நாடக எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழர்களை, அம்மாநில வனத்துறையினர் விரட்டியடிக்கும் முயற்சியிலே ஈடுபட்டுள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் தமிழக, கர்நாடக எல்லையில் காவிரி கரையை ஒட்டி கோபிநத்தம் அருகில் புதுக்காடு, தேங்கா கோம்பு, பூங்கோம்பு, அப்புக் காம்பட்டி, ஜம்புருட்டு, மாறு கொட்டாய், ஆலம் பாடி உள்ளிட்ட கிராமங்களில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாகவும், அங்கே பெரும்பாலும் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களையெல்லாம் கர்நாடக அதிகாரிகள் விரட்டியடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சிறு பொறி பெருந்தீயாக மாறுமானால், மைய நோக்கம் சிதறுண்டு திசை திரும்பி விடும். எனவே இரு மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முனைப்போடு மேற்கொண்டு சட்டம்-ஒழுங்கினைத் தக்க முறையில் பேணிக் காத்திடவும், கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழகத்தில் வாழும் கன்னடியர்களுக்கும் எந்தவிதமான இடைஞ்சலும் ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை எடுத்து உதவிடவும் வேண்டுமென்று வலியுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications