தோண்டப்பட்ட யாசர் அராபத் உடலில் இருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உடல் மீண்டும் அடக்கம்
ரமலா: பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத்தின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடலில் இருந்து பரிசோதனைக்காக 60 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்த தலைவர் யாசர் அராபத் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி பாரீஸில் உள்ள பிரான்ஸ் ராணுவ மருத்துவமனையில் தனது 75வது வயதில் இறந்தார். அவரது இறப்புக்கு இது தான் காரணம் என்று பிரான்ஸ் மருத்துவர்களால் தெரிவிக்க முடியவில்லை. ஆனால் அவர் இஸ்ரேலியர்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார் என்றே பல பாலஸ்தீனியர்கள் நம்பினர்.
இந்நிலையில் அவரது மனைவி சுஹாவிடம் இருந்து அராபத்தின் உயிரியல் மாதிரிகளைப் பெற்று ஆய்வு செய்த சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வகம் தனது அறிக்கையை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது அராபத் இறக்கும்போது அவரது உடலில் கொடிய விஷமான பொலோனியம் இருந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அராபத்தின் மனைவி சுஹா கொடுத்த புகாரின்பேரில் பிரான்ஸ் அதிகாரிகள் அராபத் மரணம் குறித்த விசாரணையை கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கினர்.
விசாரணையை மேற்கொள்ள ஏதுவாக பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ரமலாவில் அடக்கம் செய்யப்பட்ட அராபத்தின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அவரது கல்லறையை உடைத்து உடலைத் தோண்டி எடுக்கும் பணி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கி தொடர்ந்து 15 நாட்களுக்கு மேல் நடந்தது.
அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை கண்டறிய அவரது எலும்புகளில் இருந்து 60 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை 3 மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்து வருகின்றன. இந்த முடிவுகள் வெளிவர இன்னும் 3 அல்லது 4 மாதங்களாகும் என்று கூறப்படுகிறது.
மாதிரிகள் எடுக்கப்பட்ட பிறகு அராபத்தின் உடல் மீண்டும் புதைக்கப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications