2 வருடமாக காதலியை தூங்க வைத்து கற்பழித்த காதலன் கைது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் ஒரு இளம் பெண்ணை அவருடைய காதலன் கடந்த 2 வருடமாக தூங்க வைத்து கற்பழித்து வந்துள்ளார். தற்போது காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் நவோமி ஹாம்ப்சன். இவரது காதலர் பெயர் ராபர்ட் பிரையர். 27 வயதாகும் நவோமி தனது காதலனிடம் சிக்கி கடந்த 2 வருடமாக தூக்கத்திலேயே தனது கற்பைப் பறி கொடுத்து வந்துள்ளார்.

ராபர்ட், தினசரி தனது காதலிக்கு ராத்திரியில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுவார். நவோமி ஆழ்ந்த தூக்கத்திற்குப் போன பின்னர் பாலியல் பலாத்காரம் செய்து உறவு கொண்டு வந்துள்ளார். மேலும் இதை செல்போனிலும் படம் எடுத்துக் கொண்டு அதை தனது கம்ப்யூட்டரிலும் பதிவு செய்து வைத்து வந்துள்ளார்.

பலாத்காரம் செய்வதற்கு முன்பு தனது காதலியின் விரல் நகங்களுக்கு நெயில் பாலிஷ் போட்டும், நகைகளை அணிவித்தும் அலங்காரப்படுத்திய பின்னரே இந்த அக்கிரமச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

காலையில் கண் விழித்துப் பார்க்கும் நவோமிக்கு தன் உடலில் நகைகள் இருப்பதும், நெயில் பாலிஷ் போடப்பட்டிருப்பதும் குழப்பத்தை தந்துள்ளது. இதுகுறித்து ராபர்ட்டிடம் கேட்டால், ஏதாவது பதில் சொல்லி சமாளித்துள்ளார்.

இந்த நிலையில்தான் ராபர்ட் குறித்துப் போலீஸாருக்குத் தெரிய வரவே அவர்கள் அதிரடியாக வீட்டுக்கு வந்து ரெய்டு நடத்தியுள்ளனர். ரெய்டின்போதுதான் ராப்ட்டின் செயல் போலீஸாருக்கும், நவோமிக்கும் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து நவோமி கூறுகையில், அவன் எனது காதலனே இல்லை. சாத்தான். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வந்துள்ளான். போலீஸார் மட்டும் வந்திருக்காவிட்டால் நான் அழிந்தே போயிருப்பேன் என்றார் அழுதபடி.

பிரையர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு போலீஸ்காரரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+