ஏழுமலையானுக்கு தங்க சங்கு காணிக்கை கொடுத்த ஜெயேந்திரர்:
திருமலை: காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், திருப்பதி ஏழுமலையானுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க சங்கு ஒன்றை காணிக்கையாக கொடுத்துள்ளார்.
திருமலைக்கு திங்கட்கிழமை இரவு வந்த ஜெயேந்திரர், ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி. சுப்பிரமணியத்திடம் 30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட சங்கை காணிக்கையாக வழங்கினார். பெற்றுக்கொண்ட செயல் அதிகாரி ஏழுமலையான் அபிஷேகத்தின் போது இது உபயோகபடுத்திக் கொள்வதாக கூறினார்.
வழக்கில் இருந்து விடுபடுவாரா?
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் சாட்சிகளிடம் விசாரணையும், குறுக்கு விசாரணையும் முடிவடைந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரின் வக்கீல்கள் வாதம் நவம்பர் 27ம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருமலை வெங்கடாசலபதியை தரிசனம் செய்து திரும்பியுள்ளார் ஜெயேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications