கல்யாணமே வேண்டாம்… அடுத்தடுத்து 2 மணமகள்கள் ஓடியதால் மனமொடிந்த மாப்பிள்ளை!
சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண் முதல்நாள் ஓடிப்போனதால் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது. தாலி கட்டிய ஒருமணிநேரத்தில் அந்த பெண்ணும் எஸ்கேப் ஆகவே பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டார் அந்த மாப்பிள்ளை.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரத்தை அடுத்த சிடி.மாகுலபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர்(22). இவருக்கும் தம்பலபள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 மாதங்களுக்கு முன் பெரியோர்களால் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
திங்கட்கிழமை இவர்களின் நடக்க இருந்தது. ஆனால் நிச்சயம் செய்த பெண் தனது காதலனுடன் ஞாயிறன்று எஸ்கேப் ஆகிவிட்டார். இதையடுத்து அதே முகூர்த்தத்தில் பாஸ்கருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த பெற்றோர்கள், ஆமணிகுண்டா கிராமத்தை சேர்ந்த சசிகலா(19) வை உடனடியாக பேசினர். இதனையடுத்து திங்கட்கிழமை காலை கங்காவரம் அருகே உள்ள பசவேஸ்வரர் கோயிலில் பாஸ்கருக்கும், சசிகலாவுக்கும் திருமணம் நடந்தது. மணமக்களுடன் உறவினர்கள், நண்பர்கள் என புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக்கொண்டனர்.
ஆனால் திருமணமான ஒருமணி நேரத்தில் மணமகள் சசிகலா எங்கு போனார் என்று தெரியவில்லை. மண்டபம் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது கார் ஒன்றில் மணக்கோலத்தில் சசிகலா தப்பிச்சென்ற தகவல் கிடைத்தது. இதனால் மணமகன் பாஸ்கர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பலமனேர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நிச்சயிக்கப்பட்ட பெண்ணும் ஓடிப்போய், தாலிகட்டிய பெண்ணும் எஸ்கேப் ஆகவே நொந்து போன மணமகன் இனிமேல் எனக்கு திருமணமே வேண்டாம். இதற்கு உரிய நியாயம் வழங்குங்கள்' என்று கூறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications