சென்னை வந்த பிரணாப் முகர்ஜியை மு.க. ஸ்டாலின் வேண்டும் என்றே புறக்கணித்தாரா?
சென்னை: தமிழகம் வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்திக்காமல் புறக்கணித்ததன் பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை வைர விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விமான நிலையத்தில் இறங்கியதும் நேராக சி.ஐ.டி. காலனியில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது அவரை டி.ஆர். பாலு, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் அங்கு முக ஸ்டாலினைக் காணவில்லை. இந்த சந்திப்பிற்கு பிறகு தான் சட்டசபை வைர விழாவுக்கே பிரணாப் சென்றார்.
பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது திமுக தலைவர் கருணாநிதி அவருக்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களை முறையாக அழைக்காத சட்டசபை வைர விழாவுக்கு பிரணாபை வரவிடாமல் செய்ய நினைத்த திமுகவின் முயற்சி தோல்வி அடைந்தது. இருப்பினும் தங்களது செல்வாக்கை காட்ட பிரணாபை கருணாநிதி தனது வீட்டிற்கே வரவழைத்து சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அதிலும் கோபாலபுரம் செல்லாமல் கனிமொழியின் வீட்டில் வைத்து பிரணாபை சந்தித்தார் கருணாநிதி. இந்நிலையில் கடந்த முறை பிரணாப் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் ஒரு மணிநேரம் காத்திருந்து அவரை சந்தித்த திமுக பொருளாளர் முக ஸ்டாலின் இம்முறை அவரை சந்திக்கவில்லை.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications