ராமதாஸும், திருமாவளவனும் சொந்த சமுதாயத்தையே காப்பாற்றாத சுயநலவாதிகள் - ராம கோபாலன்

இதுகுறித்து ராம கோபாலன் வெளியி்ட்டுள்ள அறிக்கை:
தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்தில் அரசியல் ஆதாயம் தேட பலரும் முயன்று வருகிறார்கள். இதனைக் கையில் எடுத்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சில தலித் அமைப்புகளும் பாட்டாளி மக்கள் கட்சியே கலவரத்திற்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டின. அதற்குப் பதிலடியாக மருத்துவர் ராமதாஸ், 60 சமுதாய அமைப்புகளை ஒன்றுகூட்டி தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.
இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் சமுதாயத்திற்குக் கெடுதலை ஏற்படுத்துகிறார்கள். ஒருபக்கம் தாழ்த்தப்பட்டோரைக் கொம்பு சீவிவிடும் அமைப்புகள், கம்யூனிஸ்ட்கள், மறுபுறம் அந்தக் கலவரத் தீ அணையாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கைகள். சமுதாயத்தில் இணக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதே இவர்களின் கவலையாக உள்ளது என்பது வெட்கக்கேடானது.
பாட்டாளி மக்கள் கட்சியாகட்டும், விடுதலை சிறுத்தைகளாகட்டும் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப் பதில் வேற்றுமையை, அவநம்பிக்கையை விதைத்து வருகிறார்கள். இந்து முன்னணி, இந்து அமைப்புகளோடு இணைந்து இரு சமூகத்தாரிடமும் சென்று சமரச நடவடிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.
கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளன. அதே சமயம் இரு சமூகங்களுக்குள்ளும் பரஸ்பரம் நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவர் ராமதாஸ் 60 சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தியுள்ளார்.
இதில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு விலக்கு அளித்துள்ளார். அப்படியானால் சமுதாய ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு முஸ்லீம், கிறிஸ்தவ அமைப்புகளை ஏன் கூப்பிட்டார்? அப்படி என்ன முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு ஏற்காத தீர்மானம்?
பெண்களுக்கு 21 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பதும், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற வேண்டும் என்பதை விசேஷமாகக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸ் முஸ்லீம், கிறிஸ்தவ அமைப்புகளை இந்தக் கூட்டத்திற்கு அழைத்தது ஓட்டு வங்கி அரசியல் தானே தவிர வேறில்லை! இவருக்குத் தைரியம் இருந்தால் தீர்மானத்தை ஏற்காத அமைப்பினரை வெளியேற்றியிருக்க வேண்டும். தொப்பி போட்ட ஆள் கூட இருக்க வேண்டும் என்பதற்காகப் பல்லிளிக்கும் அரசியல் நாடகம் போடுகிறார்!
அதுமட்டுமல்ல, தலித் அமைப்புகளானாலும் சரி, பாட்டாளி மக்கள் கட்சியானாலும் சரி அவர்கள் சமூகம் முஸ்லீம்களால், கிறிஸ்தவர்களால் பாதிக்கப்பட்டபோது அந்தத் தலைவர்கள் அவர்கள் சார்ந்த சமூகத்தைக் கைவிட்டுள்ளார்கள் என்று இந்து முன்னணி பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறது!
உதாரணத்திற்கு சில சம்பவங்கள், ஒரு கிராமத்தில் அம்பேத்கார் சிலை வைப்பதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், பேர்ணாம்பட்டு, நெல்லிக்குப்பம் தொகுதிகளைச் சுழற்சி முறையில் தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கியதை எதிர்த்தும் முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியோடு அல்லாமல், தேர்தலில் ஓட்டளிக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டு, ஓ படிவத்தை நிரப்பிய போதும் முஸ்லீம் அமைப்புகளைத் திருமாவளவன் கண்டிக்கவில்லை முஸ்லீம்களுக்குத் துணை போனார். தாழ்த்தப்பட்டோரை அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்ததை மறந்திருக்க மாட்டோம். கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மக்களுக்குச் சிறுபான்மைக் கல்விக்கூடங்களில் இட ஒதுக்கீடு அளிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்த கிறிஸ்தவ அமைப்புகளை எதிர்த்துப் போராடவில்லை!
அதுபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நீதிமன்றத் தீர்ப்பு வன்னிய குடும்பத்திற்குச் சாதகமாக வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாது பக்கத்து வீட்டிலிருந்த கிறிஸ்தவ குடும்பம் அவர்களை ஓடஓட வெட்டிக் கொன்ற போதும், சமீபத்தில் சென்னை மந்தைவெளியில் ஒரு முஸ்லீம் பையன் பாமக முன்னாள் மாமன்ற உறுப்பினர் மகளை மயக்கி திருமணம் செய்தபோது ஏற்பட்ட பிரச்னையிலும் பா.ம.க.வோ, வன்னியர் சங்கமோ நியாயத்தைப் பேச முன்வரவில்லையே. ஏன்? இவர்கள் சமுதாயப் பாதுகாவலர்களா? பதவி சுகத்திற்காக, காசிற்காக சமுதாயத்தைக் காட்டிக் கொடுப்பவர்களா?
பொது தீர்மானத்தை ஏற்க வைக்கக்கூட முடியாமல் கிறிஸ்தவர்களிடமும், முஸ்லீம்களிடமும் மண்டியிடும் இவர்களது போக்கு. இவர்களை நம்பும் சமுதாயத்திற்கு இவர்கள் செய்யும் பச்சைத் துரோகம் என்று இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார் ராம கோபாலன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications