புவனேஸ்வரியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை...'குண்டாஸ்' பாயுமோ?

Subscribe to Oneindia Tamil

Buvaneswari
சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரியை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனராம். அவர் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்து வருவதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புவனேஸ்வரி மீது இதுவரை 3 வழக்குகள் போடப்பட்டுள்ளன. டிரைவ் இன் தியேட்டரில் கலாட்டா செய்தது, மடிப்பாக்கம் தொழிலதிபரிடம் காரை விற்று பின்னர் மோசடி செய்தது, டிவி சீரியல் தயாரிப்பதாக பணம் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தது என மூன்று வழக்குகள் போடப்பட்டுள்ளன.

டிவி சீரியர் வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட புவனேஸ்வரியை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு 15 நாள் சிறைக் காவல் விதித்த மாஜிஸ்திரேட், 2 நாள் போலீஸ் காவலையும் அனுமதித்து உத்தரவிட்டார்.

இந்த இரண்டு நாட்களும் விசாரணையின்போது புவனேஸ்வரியின் வக்கீல்கள் இருவரும் உடன் இருக்கலாம் என்றும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து புவனேஸ்வரியை ரகசிய இடத்திற்குப் போலீஸார் கூட்டி்ச சென்றனர். அங்கு வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.

இதற்கிடையே, புவனேஸ்வரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் வரை சிறையில் அடைக்க போலீஸார் முயன்று வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு புவனேஸ்வரி விபச்சாரம் செய்ததாக கையும் களவுமாக பிடிக்கப்பட்டு கைதானார். அந்த வழக்கு இன்னும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் இதுவரை கோர்ட் விசாரணையில் ஆஐராகமலேயே இருந்து வந்தார். இதுதொடர்பாகவும் ஒரு வழக்கைப் போட போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதேபோல, இதுதவிர வடபழனியில் குமார் என்பவரிடம் இருந்து 10 லட்ச ரூபாய் மோசடி செய்தது, ஒரு நடிகையிடம் வீடு வாங்கித் தருவதாக 12 லட்ச ரூபாய் மோசடி செய்தது, சினிமா பைனான்சியர் ஒருவரிடம் 10 லட்ச ரூபாய் மோசடி என வடபழனியில் மூன்று புகார்கள் நிலுவையில் உள்ளனவாம்.

அதேபோல அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 2 புகார்கள் புவனேஸ்வரி மீது உள்ளனவாம். லட்சுமி என்ற பெண்ணிடம் அவருடைய மகளை கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி அவரிடம் 40 லட்ச ரூபாய் மோசடி செய்தது மற்றும் இரண்டு கார்கள் வாங்கி ஏமாற்றிவிட்டார் என்ற புகாரும் அங்கு உள்ளன.

பாண்டிபஜார் காவல் நிலையத்தில், அசோக்குமார் என்பவர் 25 லட்ச ரூபாய் மோசடி புகார் ஒன்றை புவனேஸ்வரி மீது கொடுத்துள்ளார். இவற்றையெல்லாம் வைத்து புவனேஸ்வரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸார் தீவிரப் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+