பாபர் மசூதி இடிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக தலைவர்களான எல்.கே.அத்வானி, கல்யாண்சிங், உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா மற்றும் மறைந்த பால்தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த கூட்டுச் சதி வழக்கின் விசாரணையில் 2010-ம் ஆண்டு இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் இந்த வழக்கை ரேபரேலி நீதிமன்றம் கைவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்தது.
ஆனால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சாண்டிகோக் ஆஜராகவில்லை. இதனை கடுமையாகக் கண்டித்த நீதிபதி, இந்த வழக்கை அவ்வளவு சாதாரணமாக அவர் கருதுகிறாரா? என்றார்.
விசாரணையின் போது, பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி உள்ளிட்டோர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு ரேபரேலி நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications