போராட்டம் நீடிப்பு! கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம்: லாரி உரிமையாளர்கள் சங்கம்

காவிரி நீரை திறந்துவிட்டதைக் கண்டித்து மண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று போல் இன்றும் அப்பகுதியில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்திருந்ததால் அணையைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கபப்ட்டிருக்கின்றனர். இதனால் மைசூர் மற்றும் மண்டியா பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
கர்நாடாகா அரசின் முடிவைக் கண்டித்து இன்று முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருக்கிறார்.
2-வது நாளாக வாகனங்கள் நிறுத்தம்
இதனிடையே கர்நாடகாவில் தொடரும் போராட்டங்களால் ஈரோடு மாவட்டத்திலிருந்து திம்மம் மலைப்பாதை வழியாகவும் சேலம், மேட்டூரிலிருந்து மாதேஸ்வரன் மலைப்பாதை வழியாகவும் நீலகிரி மாவட்டம் ஊட்டி வழியாகவும் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் 2-வது நாளாக எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
கர்நாடகத்தின் மாதேஸ்வரன் மலை, மைசூர், கொள்ளேகால், போன்ற பகுதிகளுக்கு மேட்டூரில் இருந்து கொளத்தூர், கோவிந்தப்பாடி, பாலாறு வழியாக இயக்கப்பட்டு வந்த தமிழக பேருந்துகள் இன்றும் இயக்கப்படவில்லை. தமிழ அரசு பேருந்துகள் மாதேஸ்வரன் மலை வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் ஓசூர் வழியாக தமிழகத்திலிருந்து பேருந்துகளும் வாகனங்களும் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.
லாரி உரிமையார்கள் சங்கம் வேண்டுகோள்
இதனிடையே தமிழக லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. தமிழக வாகனங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதால் லாரிகள் கர்நாடகாவுக்குள் செல்ல வேண்டாம் என்று அந்த சங்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து எல்லைகளில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றன.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications