காவிரி பாசன விவசாயிகளுக்கு 12 மணி நேரம் பவர்: ஜெ.வுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு மழை
சென்னை: காவிரி பாசன விவசாயிகளுக்கு 12 மணி நேர மின்சாரம் வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி பாசன விவசாயிகளுக்கு தங்கு தடையில்லாமல் தினசரி 12 மணி நேரம் மின்சாரம் வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் நீர்த் தெளிப்பான்கள் வழங்கவும், விவசாயிகள் செலுத்த வேண்டிய வேளாண் காப்பீட்டுக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
மேலும், வேலைவாய்ப்பு இழந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை அளிக்கவும், பயிர் காய்ந்து போன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 13,000 ரூபாய் வீதம் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஆணையை வரவேற்று பாராட்டுகிறேன். டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கரில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் துன்பத்தை இது ஓரளவு குறைக்கும்.
இந்த அறிவிப்புகளில் குறிப்பிடப்பட்டவை உடனே தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைக்க உரிய நடவடிக்கையை அரசு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications