கர்நாடகா: எதியூரப்பாவின் புதிய கட்சி நாளை உதயம்! பாஜக ஆட்சி கவிழும் அபாயம்!

கர்நாடக மாநில பாஜகவின் நம்பிக்கைத் தூணாக இருந்தவர் எதியூரப்பா. ஆனால் அவர் சுரங்க முறைகேடு புகாரில் சிக்கி சிறைக்குப் போன பிறகு எல்லாமே தலைகீழாகிப் போனது. பெரும் போராட்டத்துக்குப் பின்னர் தமது ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கியும் பார்த்தார். ஆனாலும் அவரை பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து அவரை புறக்கணித்தே வந்தது.
இதனால் வெறுத்துப் போன எதியூரப்பா, பாஜகவுடனான 40 ஆண்டுகால உறவை துண்டித்துவிட்டு கர்நாடக ஜனதா கட்சியைத் தொடங்கியிருக்கிறார்.இந்தக் கட்சியை நாளை முறைப்படி தொடங்க இருக்கிறார். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தமது எம்.எல்.ஏக்களும் நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. எதியூரப்பாவின் நாளை கட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாஜக கூறியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் பாஜகவுக்கு 119 எம்.எல்.ஏக்களும் 44 எம்.எல்.சிகளும் இருக்கின்றனர்.
எதியூரப்பாவோ தமக்கு 40 எம்.எல்.ஏக்கள் மற்றும் 34 அமைச்சர்களில் 12 பேர் ஆதரவு இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்.
இருப்பினும் இதுவரை 5 எம்.எல்.ஏக்கள், 4 எம்.எல்.சிகள், 3 எம்.பிக்கள் பகிரங்கமாக எதியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். இவர்களில் ஒருவர் எதியூரப்பாவின் மகன் ராகவேந்திரா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பாஜகவுக்கு பீதியூட்டும் வகையில் நேற்று பெல்காம் சட்டசபைக்கு போன எதியூரப்பா, சபாநாயகர் அறையிலேயே தமது ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அசரவைத்திருக்கிறார். நேற்று காலை அவர் கொடுத்த விருந்தில் சுமார் 40 எம்.எல்.ஏக்கள், 10 எம்.பிக்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் நாளை ஹவேரியில் தமது கட்சியின் தொடக்க விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார் எதியூரப்பா. தமக்கு ஆதரவாக லட்சக்கணக்கானோர் திரள்வர் என்று எதியூரப்பா எதிர்பார்க்கின்றார்.
எப்படியும் கணிசமான எம்.எல்.ஏக்கள், எதியூரப்பாவை ஆதரித்து கட்சி தாவக் கூடும் என்பதால் நேற்று பாஜக தலைவர் நிதின் கத்காரியுடன் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வியூகம் வகுத்திருக்கின்றனர். எதியூரப்பாவுடன் கணிசமான எம்.எல்.ஏக்கள் வெளியேறினால் ஆட்சி கவிழும் அபாயமும் இருப்பதால் பாஜக மேலிடம் நாளைய நாளை நினைத்து கலங்கிப் போய்க் கிடக்க்கிறது!
-
மேற்கு வங்க மறு தேர்தலில் அசத்தி காட்டிய பாஜக! 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஏன் பெட்ரோல் விலை 10 நாளில் ரூ.7 உயர்வு? நஷ்டத்தை சொல்லுவீங்களா? மத்திய அரசை சாடிய மாணிக்கம் தாகூர் -
குடிசைகள் இல்லாத நகரமாக மாறும் மும்பை.. 2030 தான் டார்கெட்! ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு











Click it and Unblock the Notifications