எதியூரப்பாவின் புதிய கட்சி இன்று உதயம்- பாஜகவை கதிகலங்க வைக்கும் அமைச்சர்கள்!

எதியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக அமைச்சர் புட்டசாமி மற்றும் லோக்சபா எம்.பி. பசவராஜ் ஆகியோர் பாஜகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். புட்டசாமியும் தமது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த களை எடுப்பு படலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'பந்தை' எதியூரப்பா ஆதரவாளர்கள் கையிலெடுத்திருக்கின்றனர்.
மாநில உள்கட்டமைப்புத் துறை அமைச்சரான சுனில் வல்யபுரே, தமது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அனுப்பியிருக்கிறார். இன்று ஹவேரியில் நடைபெறும் எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சியின் அறிமுக மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இதேபோல் வேளாண்துறை அமைச்சர் உமேஷ் கட்டாவும் புட்டசாமி மற்றும் பசவராஜ் மீதான் ஒழுங்கு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டரிடம் திங்கள்கிழமையன்று தமது எதிர்ப்பை நேரடியாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
தமது ஆதரவாளர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுத்து வருவது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் எதியூரப்பா, கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை அமைத்ததே நாங்கள்தான். அந்த ஆட்சி கவிழக் கூடாது என்றே காத்திருக்கிறோம். இப்பொழுதும் எங்களது கூட்டணியால்தான் பாஜக ஆட்சி செய்து வருகிறது. 10 அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். இப்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டால் அவர்கள் தானாகவே பாஜகவிலிருந்து விலக நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.
இதனால் கடுப்பாகிக் கிடக்கும் பாஜக மேலிடமோ களை எடுத்தால் வயலே இருக்காதோ என்று கதிகலங்கிப் போய்கிடக்கிறது!
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications