ஆருத்ரா தரிசனத்திற்கு தயாராகும் சிதம்பரம் நடராஜர் ஆலயம்: டிசம்பர் 19ல் கொடியேற்றம்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன கொடியேற்ற விழா வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

10 நாள் திருவிழா
இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் வரும் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து தினசரி பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும். 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் நடராஜமூர்த்தி, சிவகாமிசுந்தரி தேர் உற்சவம் நடைபெறும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
விழாவில் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் 28-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் ராஜசபை என்கிற ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், ஸ்ரீமத் நடராஜமூர்த்திக்கும் மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பகல் 12 மணிக்கு மேல் ஆருத்ரா மகா தரிசனமும் ஞானாகாச சித்ஸபா பிரவேச தரிசனமும் நடைபெறுகிறது. 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலா காட்சி அளித்தலும், 30-ந் தேதி ஞானபிரகாசம் குளத்தில் தெப்பஉற்சவத்துடன் விழா நிறைவு பெருகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உத்தரகோசமங்கை
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆலயத்தில் வரும் 28ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இங்குள்ள மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் காட்சியளிப்பார். ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் சந்தனம் களையப்பட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications