தர்மபுரி தலித் கிராமங்களில் அமைதி திரும்ப உண்ணாவிரதம்; பதற்றம்-போலீஸ் குவிப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரியும், பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியும் இருவேறு இடங்களில் பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கிருஷ்ணாபுரம் மற்றும் செங்கல்மேடு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இன்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப்பகுதிகளில் இருக்கும் பெண்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நாயக்கன் கொட்டாய் பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும் கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்கள், அப்பாவிகள், அரசு ஊழியர்கள் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது உள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் இடையே மோதலை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் செயல்படும் அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணா விரதப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி சஞ்சய்குமார் மேற்பார்வையில் சேலம், தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட எஸ்.பிக்கள், 14 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட போலீசார்
குவிந்தனர் இதனால் அங்கு பதற்றம் உருவானது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications