இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும்: வேல்முருகன்
சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் அந்நாட்டு இலங்கை ராணுவத்தை வெளியேற்றிவிட்டு தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வரை ஐக்கிய நாடுகள் படையை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான சிங்களப் பேரினவாத அரசின் கொடுந்தாக்குதல்களும் சட்டவிரோத கைது நடவடிக்கைகளும் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாளை கடைபிடித்தார்கள் என்ற ஒரே குற்றச்சாட்டுக்காக மாணவர்களை வேட்டையாடி வருகிறது சிங்களப் பேரினவாத அரசு. வவுனியாவில் நேற்று கூட 2 மாணவர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது இதுவரை மொத்தம் 10 மாணவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.
மாணவர்களை மட்டுமல்ல.. யாழ்ப்பாணத்தில் 17 அப்பாவித் தமிழர்களை பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் திடீரென கைது செய்திருக்கிறது சிங்களப் பேரினவாத அரசு. கைது செய்யப்படுகிறவர்களின் கதி என்ன? அவர்கள் எந்த நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தபப்ட்டனர்? எந்த சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற விவரத்த்தைக் கூட இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவின் அரசாங்கம் தெரிவிக்க மறுத்து வருகிறது.
தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் கொடுமையை கேட்டறிய வந்த ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காணும்வரை தமிழர் பிரதேசத்தில் ஐ.நா. படையை நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரோ இதுவரை வாய்மூடி மெளனியாக இருந்து வருகிறார். இலங்கையில் மாணவர்கள் மீதும் அப்பாவித் தமிழர்கள் மீதும் சிங்களத்தின் தொடரும் கோரக்கொடுமையை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்! ஈழத் தமிழர்கள் கோருவது போல் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணும்வரை ஐக்கிய நாடுகள் படையை தமிழர் தாயகப் பிரதேசங்களில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஈழத் தமிழர்களின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர் சக்திகள் ஓரணியில் ஒன்று திரளவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உரிமையோடு அழைக்கிறது! என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications