24 மணி நேரமும் சுறுசுறுப்பாக செயல்படும் மோடியின் 'போர்ப்படைத் தளபதிகள்'-117 சீட்களுக்கு குறி!

அருண்ஜேட்லி உள்ளிட்டோர் அடங்கிய மோடி குழுவினர் இதற்கான தீவிரப் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். மோடியின் வீட்டில் வைத்து ஜேட்லி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு நிலவரம் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாம்.
குஜராத் தேர்தல் முடிவுகள் தாங்கள் நினைத்தபடி இருந்தால் 117 தொகுதிகளை கண்டிப்பாக பிடித்து விடலாம் என்று பாஜக தலைவர்கள் கருதுகிறார்களாம். மேலும் இந்தத் தேர்தல் முடிவுகள் அப்படியே லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும் என்ற வேகத்திலும் பாஜக உள்ளதாம். எனவேதான் குஜராத் தேர்தல் குறித்து தீவிரம் காட்டி வருகிறார்கள் பாஜக தலைவர்கள்.
பிரசார நேரம் போக முதல்வர் மோடி எப்போதெல்லாம் அகமதாபாத் திரும்புகிறாரோ அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் மோடியின் வீட்டில் கூடி ஆலோசனையில் குதித்து விடுகின்றனர். இவர்களின் ஆலோசனையில் குறிப்பாக சவுராஷ்டிரா பகுதி குறித்துத்தான் தீவிர அக்கறையும், கவனமும் காட்டப்படுகிறதாம்.
முதல்வரின் வீடு மட்டுமல்லாமல் மாநில கட்சித் தலைமையகம், அருண்ஜேட்லி தங்கியுள்ள பிளாட் ஆகியவற்றிலும் தொடர்ந்து ஆலோசனைகள் நடந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், நாங்கள் இப்போது 2 தேர்தல்களை சந்திக்கிறோம். சவுராஷ்டிராவை தனி தேர்தலாகவே நாங்கள் பார்க்கிறோம். மற்ற பகுதிகளை ஒரு தேர்தலைக சந்தித்து அணுகியுள்ளோம் என்றார்.
பாஜக தலைவர்களின் முக்கியக் கவலையே கேசுபாய் படேல்தான். முன்னாள் முதல்வரான இவர் பாஜகவிலிருந்து பிரிந்து குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் தொடங்கியுள்ளார். இவர் பக்கம் படேல் சமுதாயத்தினர் போய் விடுவார்களோ என்ற பயத்தில் குஜராத் பாஜக உள்ளது. கடந்த 17 வருடமாக படேல்கள்தான் குஜராத் பாஜகவைத் தாங்கிப் பிடித்து நிற்கிறார்கள். எனவே கேஷுபாய் படேலால் பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சம் மோடிக்கே உள்ளதாம்.
இதுகுறித்தெல்லாம் ஜேட்லி தலைமையிலான குழுவினர் தீவிர ஆய்வுகள், ஆலோசனைகளில் உள்ளனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர் அமீத் ஷா ஆவார்.
182 தொகுதி நிலவரங்களையும் உடனுக்குடன் அறிய இன்டர்நெட் வசதியுடன் கூடிய வசதிகளையும் இந்தக் குழுவினருக்காக ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் மோடி. இமெயில்கள் மூலம் அனைத்துத் தகவல்களையும் பரிமாறிக் கொள்கின்றனராம். ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவை இதற்காக ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள்தான் தகவல்களை மெயிலில் அனுப்புவதும், மேலிடம் கேட்கும் சந்தேகங்களை விளக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேஷுபாய் படேல், காங்கிரஸ் தலைவர்களின் உத்திகள், பிரசாரங்கள், கூட்டங்கள் குறித்த தகவல்களையும் கண்காணித்து உடனுக்குடன் இவர்கள் அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கின்றனராம்.
24 மணி நேரமும் இந்த போர் அறை செயல்பாட்டில் உள்ளது. காலை 5 மணிக்கு தனது முதல் ஆய்வை ஆலோசனையை நடத்தி விடுகிறார் மோடி. அதன் பின்னர் எதை இன்று டிவிட் செய்வது என்பது குறித்தும் ஆலோசித்து அதையும் செய்து விடுகிறார். பிறகு 8 மணிக்கு ஜெட்லியுடன் தொலைபேசியில் ஒரு ஆலோசனை நடத்துகிறார். பின்னர் தனது பிற தேர்தல் பணிகளைத் தொடங்குகிறார்.
மோடி மற்றும் ஜேட்லி ஆகியோரது தலைமையில் சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக் குழுவினரின் செயல்பாடுகளே கூட குஜராத்தில் இன்று ஒரு பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications