குஜராத் முதல் கட்ட தேர்தல்- விறுவிறு வாக்குப் பதிவு

மொத்தம் 182 சட்டசபைத் தொகுதிகள் குஜராத் சட்டசபையில் உள்ளன. அதில் 15 மாவட்டங்களில் 87 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் முக்கியமான சவுராஷ்டிரா பகுதிக்குட்பட்ட 52 தொகுதிகளும் அடக்கம். 35 தொகுதிகள் தெற்கு குஜராத்தில் உள்ளன.
சவுராஷ்டிராபகுதிதான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இங்கு யார் அதிக இடங்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களே ஆட்சியைப் பிடிக்க முடியும். மேலும் முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் தற்போது தனிக் கட்சி ஆரம்பித்துள்ளதால் பாஜக பதற்றமாகவே உள்ளது.
சவுராஷ்டிரா பகுதியில் பாஜக 87 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி 84 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கேசுபாய் படேல் கட்சி 83 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தப் பகுதியில் கேசுபாய்க்கு செல்வாக்கு கொஞ்சம் அதிகம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் 1 மணி நேரத்தில் 6% வாக்குகள் பதிவாகி இருந்தன. மாலை 3 மணிவரை 53% வாக்குகள் பதிவாகி இருந்தன. குஜராத் பரிவர்த்தன் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான கேசுபாய் பட்டேல் ராஜ்கோட்டில் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரண்டு கட்ட தேர்தலிலும் தமது கட்சி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்றார். முதல்வர் மோடியோ ட்விட்டரில், தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 17ம் தேதி நடைபெறும். அப்போது மீதமுள்ள 95 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும். டிசம்பர் 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications