வால்மார்ட் லஞ்ச விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
டெல்லி: வால்மார்ட் நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைய 125 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டு அனுமதிக்கு, இந்தியாவில், ஆதரவு திரட்டுவதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த, "வால்மார்ட்' நிறுவனம், 125 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. அமெரிக்க, "செனட்' சபையில், அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மூலம், இது, தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் எல்லாம், இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு, லஞ்சமாக வழங்கப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது.
இந்த பிரச்சினை இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவ்விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவோ அல்லது நீதிமன்ற விசாரணையோ நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க., பாரதிய ஜனதா, இடதுசாரி கட்சிகள் ஆகியவைகள் வலியுறுத்தின. ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வரும் ராஷ்ட்ரீய ஜனதாதளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள், விரிவான விசாரணை வேண்டும் என்று கோரின.
இதனால் பாராளுமன்ற இருசபைகளும் இரண்டு நாட்கள் முடங்கிப்போனது. நேற்று 3-வது நாளும் இந்த பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவுசெய்திருந்தன. புதன்கிழமை காலையில் நாடாளுமன்ற விவாதம் தொடங்கியவுடன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, வால்மார்ட் விவகாரம் குறித்து உடனடியாக ஒரு நீதிமன்ற விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை அறிக்கை 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, வேறு வழியில்லாமல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு அடிபணிந்தது. வால்மார்ட் நிறுவனமானது ரூ.125 கோடி செலவழித்ததாக கூறப்படுவது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் அறிவித்தார். இந்த விசாரணையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications