பெண்களை வலையில் வீழ்த்தி படம் பிடித்து ரசிக்கிறார்... கணவர் மீது மனைவி போலீஸில் புகார்
சென்னை: எனது கணவர் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து அதை தனது செல்போனில் வைத்துப் பார்த்து ரசிக்கிறார் என்று கூறி மனைவி ஒருவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி. 32 வயதான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 1998ம் ஆண்டு எனது வீட்டுக்கு எதிர் வீட்டில் குடியிருந்த பிரபுவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு 14 வயதில் புவனேஸ்வரன் என்ற மகனும், 12 வயதில் திணேஷ் குமார் என்ற மகனும் உள்ளனர்.
எனது கணவர் ஒரு பெண் பித்தர். எனக்குத் திருமணமாவதற்கு முன்பே அவருக்கு பல பெண்களுடன் உறவு இருந்தது. எனது தோழி சுசித்ராவுடன் நெருக்கமாக பழகி வந்தார்.அவர் மூலம் அறிமுகமான ஸ்ரீதேவி என்ற நர்ஸுடனும் தொடுப்பு இருந்தது. இதில் ஸ்ரீதேவியுடன் மிகவும் நெருக்கமாக பழகி அவர் மூலம் 2 குழந்தைகளையும் அவர் கொடுத்துள்ளார்.
இவரது பழக்க வழக்கம் பிடிக்காததால் 2009ம் ஆண்டு விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போனேன். ஆனால் என்னை மிகவும் கெஞ்சி வழக்கை வாபஸ் பெற வைத்து விட்டார். நானும், பிள்ளைகள் நலனுக்காக மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தேன்.
ஆனால் அவரது காமலீலைகள் நிற்கவில்லை. தொடர்ந்து பல்வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார். அவரது செல்போனை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தன. அதுகுறித்துக் கேட்டால், இவர்களுடன் எனக்குப் பழக்கம் உள்ளது. இவர்களது ஆபாசப் படங்களைப் பார்க்காமல் எனக்குத் தூக்கம் வராது என்று பச்சையாக கூறுகிறார்.
எனது கணவர் திருந்துவது போலத் தெரியவில்லை. என்னை மட்டுமல்லாமல், என்னைப் போல பல பெண்களின் வாழ்க்கையை அவர் சூறையாடியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் காமாட்சி.
-
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications