அச்சன்கோவிலில் இன்று மஹோற்சவ திருவிழா துவங்கியது: 24ல் தேரோட்டம்

கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மஹோற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு இத்திருவிழா இன்று காலை 8.45 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க கொடிமரத்தில் தந்தரி கொடியேற்றினார்.
முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு திரு ஆபரணங்கள் சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் கேரள பக்தர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் தினமும் காலை, மாலை வேளைகளில் கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மதியம் அன்னதானமும் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நாளான வரும் 24ம் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 25ம் தேதி ஆராட்டு விழா நடக்கிறது. 26ம் தேதி மஹோற்சவ திருவிழா நிறைவு விழா நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications