நாட்டை உலுக்கிய டெல்லி பலாத்கார பயங்கரம் - குற்றவாளிகளில் 4 பேர் அடையாளம் தெரிந்தது

நேற்று இரவு டெல்லி அருகே முனிர்கா என்ற இடத்திலிருந்து ஒரு தனியார் பேருந்தில் ஒரு இளம் பெண்ணும், அவருடைய நண்பரும் கிளம்பினர். பாலம் விஹார் போவதற்காக அவர்கள் பஸ்சில் பயணித்தனர். பேருந்து கிளம்பி பத்து நிமிடம் ஆன நிலையில், பஸ்சில் இருந்த சிலர் அந்தப் பெண்ணைச் சீண்ட ஆரம்பித்தனர். இதைத் தட்டிக் கேட்ட அவரது நண்பரை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து பஸ்சை விட்டு வெளியே தள்ளி விட்டனர்.
பின்னர் அந்தப் பெண்ணை ஐந்து பேரும் மிக்க கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அரைகுறையான நிலையில் அப்பெண்ணை பாலம் ஒன்றில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.
சம்பந்தப்பட்ட பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருபவர். அவருடன் வந்த நபர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். படம் பார்த்து விட்டு இருவரும் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி விட்டது. ஒரு பெண் முதல்வராக இருக்கும் டெல்லியிலேயே இந்த நிலையா என்று அனைவரும் அதிர்ந்து போயுள்ளனர்.
பஸ் கண்டுபிடிப்பு -4 பேரின் அடையாளம் தெரிந்தது
இந்த நிலையில் இந்த பயங்கரத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களில் நான்கு பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட பஸ்ஸும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோய்டாவில் உள்ள பள்ளி வளாகம் ஒன்றில் வைத்து பஸ்சைக் கண்டுபிடித்துள்ளது போலீஸ்.
குற்றவாளிகள் யார் என்பது தெரிய வந்துள்ளதால் விரைவில் அவர்களைக் கைது செய்து விடுவோம் என்று போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் பலாத்கார தாக்குதலுக்குள்ளான பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் சிகிச்சை பெற்று வரும் சப்தர்ஜங் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications