குஜராத் தேர்தல் முடிந்த்து - 65 சதவீதத்திற்கும் மேலான வாக்குப்பதிவு

இன்று மொத்தம் 95 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் மோடி போட்டியிடும் மணிநகர் தொகுதியும் அடக்கமாகும். இன்றைய வாக்குப் பதிவுடன் தேர்தல் முடிவடைந்தது. 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
காலை முதலே அனைத்துத் தொகுதிகளிலும் விறுவிறுப்பானவாக்குப் பதிவு காணப்பட்டது. மக்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். காலையிலேயே முதல்வர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் பாஜக வெற்றி பெறும், மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று செய்தியாளர்களிடம் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதேபோல பாஜக மூத்த தலைவர் அத்வானி ஷாபூர் என்ற இடத்தில் ஓட்டுப் போட்டார். அதேபோல மூத்த தலைவர் அருண் ஜேட்லியும் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
முன்னதாக கடந்த 13ம் தேதி முதல் கட்டமாக 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில் வரலாறு காணாத வகையில் 70.7 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம். இன்று வாக்குப் பதிவு நடைபெற்ற அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் 92, கேசுபாய் படேலின் கட்சி 84 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தோராயமாக 65 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சரியான விவரம் தெரிய சில மணி நேரங்களாகும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications