ரூ4,000 கோடி கிரானைட் கற்கள்- ரூ9,783 கோடி சொத்துகள் பறிமுதல்: கலெக்டர்கள் மாநாட்டில் ஜெ.

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட ரூ4 ஆயிரம் கோடி கிரானைட் கற்களை தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

தமிழக அரசு வெளிப்படையான நேர்மையான நிர்வாகத்தை அளித்து வருகிறது. தமிழகத்தில் ஏழ்மை நிலையை அகற்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு பொருளாதார வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. ஜாதி மோதல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தம் 1627 நில மோசடிகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரூ836 கோடி மதிப்பிலான அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட ரூ4 ஆயிரம் கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதேபோல் கிரானைட் கொள்ளை மூலம் சம்பாதித்த ரூ9,783 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கடுமையான கண்டனத்தால் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. 2012-ம் ஆண்டில் இலங்கை கடற்படை தாக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அரிசி கடத்தல் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டிருக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சும் நடவடிக்கையும் தடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் 2023 தொலைநோக்குத் திட்டத்துக்கு தொழில்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+